About Us

அன்புடையீர் வணக்கம்.

இது ஜோதிர் தியான மையம். தங்களை அன்புடன் இந்த மையத்திற்கு வரவேற்கின்றது. இந்த மையத்தில் தாங்கள் தியான நிலைகளில் பற்றி நல்ல செய்திகளை ஆழமாக தெரிந்து கொண்டு பயிற்சி எடுத்து நல்ல ஒரு உயர் நிலையை அடையலாம். ஏனென்றால் இது புத்தகங்களை படித்து விட்டு தியானம் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிலையம் அல்ல. 40 வருட கால ஆழ்ந்த தியானத்தில் வெளிப்பாடு இந்த தியான மையம். ஓரளவு இறையினை தொட்டதனால் இறைமை அளித்த அந்த அனுபவங்கள் வாழ்வின் ரகசியங்கள் அனைத்தும் விளக்கப்படும். பழைய சித்தர் நூல்களில் இருக்கும் பல்வேறு விதமான நிலைகள் பற்றிய ஆழ்ந்த விளக்கம் எங்களிடம் கிடைக்கும். இறைமை என்றால் என்ன, ஆனந்தம் என்றால் என்ன, ஏன் நாம் இறைவனை அடைய வேண்டும், இந்த மனித பிறவி எதற்காக ஒவ்வொரு உயிருக்கும் அளிக்கப்படுகின்றது, இந்த பிறவியின் நோக்கம் என்ன, விதி என்றால் என்ன, அந்த விதியின் வழியை செல்வது மதியா அல்லது அந்த மதியை கொண்டே விதியை மாற்ற முடியுமா என்பது போன்ற பல்வேறு விதமான சந்தேகங்களை நீங்கள் வகுப்புகள் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல பாதையை அடைவதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ள நாங்கள் சரியான வழியை காட்டுகிறோம்.

தியான பயிற்சிகள்.

மனம் என்றால் என்ன.

தியானம் பழகும் பொழுது மனமே அவர்களுக்கு பிரதானமாக இருப்பதால் அந்த மனம் பற்றிய சூக்கும உண்மைகள் அவர்களுக்கு கற்பிக்கப்படும்.

விதி என்றால் என்ன

மனமானது விதி வழி செல்லதால் அந்த விதியை பற்றிய உண்மைகளும் அவர்களுக்கு பல்வேறு விதமான எளிய உதாரணங்கள் மூலம் கூறப்படும்

காலம் என்றால் என்ன

காலம் என்பது மனிதர் வாழ்வில் எவ்வாறு உள்ளது. அதன் நிலை என்ன. அது விதியை எவ்வாறு நடத்திச் செல்கிறது என்பது போன்ற பல அறிய உண்மைகளை உங்களுக்கு விளக்கிக் கூறுகிறோம்.

சமாதி நிலை

அந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது நீங்கள் சமாதி நிலையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். உண்மையான சமாதி நிலையில் என்ன நடக்கும் என்ன விஷயங்களை எதிர்கொள்ளலாம் என்பது போன்ற பல விஷயங்களை உங்களுக்கு நாங்கள் தெளிவாக புரியும்படி கூறுகிறோம். அதில் உடல்,மனம் தாண்டி காலமில்லா நிலையில் பயணம் செய்து இறைமையை நோக்கி செல்லும் பயிற்சி ஆகும்.

காலத்தின் இரகசியம்

காலத்தின் ரகசியம் என்ற புத்தகத்தையும் நான் எழுதி உள்ளேன் அதில் பல்வேறு ஆழ்ந்த தியான நிலைகள் பற்றிய அனுபவ உண்மைகளை கூறியுள்ளேன். மேலும் இது போன்ற பல புத்தகங்களை வெளியிட மக்களாகிய உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும். இந்த இறைமையின் நோக்கம் என்பது என்ன என்று மனிதர்களுக்கு அனுபவரீதியாக தெரியாது.

ஆனந்த நிலை

இந்த இறைமையின் நோக்கமானது ஆனந்த நிலை மட்டுமே. அந்த ஆனந்த நிலையை அடைய உண்மையான ஒரு வழிகாட்டுதலை நீங்கள் மேற்கொள்ள எங்கள் ஜோதிட தியான மையத்தில் சேர்ந்து பயனடையுங்கள். இங்கு பணம் பிரதானமாக எண்ணப் பட்டு செயல்படுத்தப்படுவதில்லை. வசதி இருப்பவர்கள் இந்த தியான மையத்திற்கு நன்கொடைகளை அளிக்கலாம். வசதி இல்லாதவர்கள் இலவசமாகவே இங்கு பயிற்சிகளை பெறலாம். கட்டணங்களும் அதிகமான கட்டணங்கள் ஆக இருக்காது. சாதாரணமான கட்டணங்கள் இந்த தியான மையத்தை வழிநடத்த உதவியாக இருக்கும். எப்பொழுதும் நல்லதையே நாடுங்கள்.அது இறைமையை அடைய உங்களுக்கு நிச்சயமாக உதவும்.